Home மலேசியா டிஆர்பி – ஹைகோம் ஊடக போவ்லிங் போட்டி 2022

டிஆர்பி – ஹைகோம் ஊடக போவ்லிங் போட்டி 2022

டிஆர்பி-ஹைகோம் நடத்திய இந்த போவ்லிங் போட்டியில் இருந்து 32 அணிகளில் 17 ஊடகங்கள் கலந்துக் கொண்டன. ஹரியான் மெட்ரோவின் மெட்ரோ ரேஞ்சர்ஸ் வெற்றி வாகை சூடியது.

பெர்னாமா பெர்பாடுவான் ஏ குழுஅணியிலிருந்து இரண்டாவது இடம் பிடித்தன. பெர்னாமா பெர்பாடுவான் பி அணி மூன்றாவது இடம் பிடித்தன. மெட்ரோ ரேஞ்சர்ஸ்- ஹரியான் மெட்ரோவைச் சேர்ந்த 12 விளையாட்டாளர்கள் சிறப்பான தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆண்களுக்கான பிரிவில் ஷா இக்பால், பெண்களுக்கான பிரிவில் ஹிடாஹான் இருவரும் சிறந்த விளையாட்டாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பெர்னாமாவைச் சேர்ந்த அஹ்மத் ஜூபர் சிறந்த போவ்லிங் விளையாட்டாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மஹ்மூத் ரசாக் பஹ்மான் பேசுகையில், பொதுவாக, இந்த நிகழ்ச்சி கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பாடு செய்யப்படும். இருப்பினும்  அடுத்த ஆண்டு முதல் , மற்ற மாநிலங்களில் உள்ள ஊடகங்களும் பங்கேற்கும் வகையில் மற்ற நகரங்களில் நடத்துவோம் என்றார்.

இந்த ஆண்டு சில புதிய ஊடகங்கள் இணைந்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் குறிப்பாக மக்கள் ஓசை, நன்யாங் சியாங் பாவ், சினார் ஹரியான் ஆகியவை கலந்துக் கொண்டதாக மஹ்மூத் ரசாக் பஹ்மான் கூறினார். -கு.இராமன்குட்டி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version