Home மலேசியா நாட்டில் கிட்டத்தட்ட 4,800 வெள்ளம் சூழக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

நாட்டில் கிட்டத்தட்ட 4,800 வெள்ளம் சூழக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

நாடு முழுவதும் 4,800 வெள்ள அபாய இடங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது.  அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் ஹம்தான் வாஹிட், நாடு முழுவதும் 186 நீர் எழுச்சி பகுதிகளையும் 254 அபாயகரமான சரிவுகளையும் கண்டறிந்துள்ளோம் என்றார்.

5 மாநிலங்களை உள்ளடக்கிய 14 மாவட்டங்களில்  வெள்ள நிலைமையை  கண்காணித்து வருவதாகவும்,  மொத்தம் 2,763 பேர் 22 தற்காலிக நிவாரண மையங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்     என்றும் தெரியவந்துள்ளது.

 அதிக வெள்ளப்பெருக்கு   ஏற்படும்  இடங்களாக சரவாக்கில் 1,034     இடங்களும் அதைத் தொடர்ந்து கிளந்தான் (595), பகாங் (554), சபா (520) மற்றும் ஜோகூர் (432)       இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

 மழைக்காலத்தில்  மலைகள்,  ஆறுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை  நிறுத்துமாறு  பொது மக்களுக்கு   அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆண்டு இறுதி விடுமுறைக் காலத்தைக்      கொண்டாட   பல குடும்பங்கள்  திட்டமிடுகின்றன, ஆனால் அவைகளை  இப்போதைக்கு  நிறுத்திவைப்பது அனைவருக்கும் நன்மையளிக்கும்     என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version