Home மலேசியா ஐந்து மாநிலங்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஐந்து மாநிலங்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஜோகூர், கெடா, பகாங், பேராக் மற்றும் பினாங்கில் கணிசமான கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் , 24 மணி நேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறையின் (JPS) தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் (JPS) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (டிசம்பர் 14) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், ஜோகூரில் உள்ள நான்கு மாவட்டங்கள், திடீர் வெள்ள அபாயம்   ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட  இடங்கள் பிளென்டாங்; கோத்தா திங்கி (செடிலி பெசார், செடிலி கிச்சில், தஞ்சோங் சூரத், உலு சுங்கை செடிலி பெசார்); மெர்சிங் (பாடாங் எண்டாவ் சிட்டி, பாடாங் எண்டாவ், திரையாங்); மற்றும் மூவார் (பண்டார் மகாராணி, ஜலான் பக்ரி, ஆயர் பலோய்) மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்  பாதிக்கப்படலாம்.

கெடாவில்,  லுபுக் பண்டார் நகர்பகுதி, சுங்கை கிச்சில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பண்டார் பாரு பகுதிகளும், மேலும்  பகாங்கில், குவாந்தான் (குவாந்தன் நகரம், கோல குவாந்தன், பூலாவ் மானிஸ், சுங்கை காராங்) ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட உள்ளன; மாரான் (மாரான் நகரம், செனோர், பெக்கான்)  மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்  அடங்கும்.

பேராக்கைப் பொறுத்தவரை,  மூன்று மாவட்டங்கள் ஹிலிர் பேராக் (சங்காட் ஜோங், டுரியான் செபதாங்); கிரியான் (பாகான் செராய், கோல குராவ், பாரிட் புந்தார்) ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களும் அதிகாரிகள் மற்றும்  வெள்ளப் பேரிடர் மேலாண்மை குழுவினர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை PRABN கேட்டுக்கொள்கிறது.

Previous articleஅடுத்த 7 நாட்கள் எரிப்பொருள் விலையின் மாற்றம்
Next articleகுப்பை சண்டை கொலை மிரட்டலில் முடிந்தது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version