Home மலேசியா பத்தாங்காலி நிலச்சரிவு: நேற்றிரவு 51 பெரியவர்கள், 30 சிறுவர்கள் முகாமிடும் தளத்தில் பதிவு

பத்தாங்காலி நிலச்சரிவு: நேற்றிரவு 51 பெரியவர்கள், 30 சிறுவர்கள் முகாமிடும் தளத்தில் பதிவு

இன்று அதிகாலை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பத்தாங்காலியிலுள்ள the Father’s Organic Farm பகுதியிலுள்ள முகாமில் 51 பெரியவர்களும் 30 சிறுவர்ககளும் நேற்றிரவு அங்கு தங்குவதற்கு பதிவு செய்துள்ளதாக, அந்த முகாமின் பொறுப்பாளர் என நம்பப்படும் சாங் என்ற நபர் கூறினார்.

இருப்பினும், நான்கு வயது முதல் 12 வயத்துக்குள்ளான சிறுவர்கள் பதிவு செய்ய வேண்டிய விதிமுறை இருந்தால், அங்கு தங்கியிருந்தவர்களில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் சாங் கூறினார்.

முகாமில் இருப்பவர்கள் பெரும்பாலும் குடும்பங்கள் என்றும் அதில் பள்ளி அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் இல்லை என்றும் சாங் கூறினார்.

30 மீற்றர் உயரமான நிலச்சரிவை அடுத்து, அங்கு சுமார் 100 பேர் முகாமில் சிக்கியிருக்கலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

நண்பகல் 1 மணி நிலவரப்படி, 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 16 பேர் சம்பவத்தில் உயிரிழந்தனர் மேலும் 17 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version