Home மலேசியா பத்தாங் காலி நிலச்சரிவு: சிங்கப்பூரை சேர்ந்த மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பத்தாங் காலி நிலச்சரிவு: சிங்கப்பூரை சேர்ந்த மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

பத்தாங் காலி அருகே  வெள்ளிக்கிழமை அதிகாலை  ஏற்பட்ட  நிலச்சரிவு சம்பவத்தில் சிக்கிய சிங்கப்பூரை சேர்ந்த  மூன்று   நபர்களை  பாதுகாப்பாக மீட்டதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.  இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய மலேசிய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  மீட்பு நடவடிக்கையை மேற்கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரபல முகாம் தளத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும்  அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் முகாமிட்டவர்கள் மற்றும் முகாம் பணியாளர்கள் உட்பட மொத்தம் 94 பேர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர், 21 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 61 பேர்  பத்திரமாக  மீட்கப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version