Home மலேசியா பத்தாங்காலி நிலச்சரிவில் உயிரிழந்த மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன

பத்தாங்காலி நிலச்சரிவில் உயிரிழந்த மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோத்தோங் ஜெயாவில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ணை முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 15 உடல்கள் இன்று பிற்பகல் 1 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை மீட்கப்பட்ட 24 சடலங்களில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) டிஎன்ஏ, கைரேகை பரிசோதனை மற்றும் முக அம்சங்கள், தனிப்பட்ட உடல் அடையாளங்கள் அல்லது தனிப்பட்ட உடமைகள் மூலம் அடையாளம் காணுதல் ஆகிய மூன்று முறைகளைப் பயன்படுத்தி அடையாளம் காணும் செயல்முறை நடத்தப்பட்டது.

24 உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காயமடைந்தவர்களில் இருவர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இருவர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று இல்லம் திரும்பினர்.

 பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் பொறுப்பான முகவர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அது கூறியது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300 மீ நீளமும் 70 மீ உயரமும் கொண்ட சரிவின் ஒரு பகுதி முகாம் மீது விழுந்தது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட இறந்தவர்கள்:

1. Lim Wei Xin (36, female), 2. Hong Mei Jing (38, female), 3. Nurul Azwani Kamaruzaman (31, female), 4. Lai Lee Yin (37, female), 5. Tong Kai En (9, male), 6. Lai Lee Koon (44, female), 7. Ka Kok Boon (43, male), 8. Zech Loh Qi Yi (7, male), 9. Eng Huai Yi (12, female), 10. Eng Choon Wen (43, male), 11. Ng Yee Tong (11, female), 12. Ka Sin Ya Vanya (6, female), 13. Lam Sook Man (37, female), 14. Wong Kim Yap (34, male), 15. Fong Choy Kee (43, female), 16. Liu Pei Si (44, female), 17. Daniel Khor Yen (5, male), 18. Chin Su King (36, female), 19. Lai Chee Sam (33, male), 20. Wong Zi Hang (1, male),     21. Gain Choo Yin (35, female)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version