Home Top Story பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவு

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவு

பிரதமர் மோடி மற்றும் தாயார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீரபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்தி நகரில் வைக்கப்பட்டுள்ள தாயார் ஹீரா பென் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடல் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி குஜராத்தில் இருக்கும் யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹீராபென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு வயிற்று போக்கு, கடுமையான உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி யு என் மேத்தா மருத்துவமனையில் ஹீராபென் மோடி காலமானார். இதையடுத்து அவரின் உடல் அதிகாலையில் காந்தி நகரில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கே ஹீராபென் மோடியின் உறவினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பிரதமர் மோடிக்கு அதிகாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனி விமானம் மூலம் காலை 7 மணி அளவில் குஜராத்திற்கு வருகை புரிந்தார். ஹீராபென் மோடியின் உடலை மோடி பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பிரதமர் மோடி கருப்பு, வெள்ளை குர்தாவில் எளிமையாக வந்து இருந்தார். குளிர் மிக அதிகமாக இருந்ததால் தன்னை சுற்றி ஒரு சால்வை அணிந்து மோடி காரில் சென்றார். மிகவும் சோகமாக காணப்பட்ட பிரதமர் மோடி, வீட்டிற்கு செல்லும் முன், வீட்டில் எஸ்பிஜி அதிகாரிகள் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் துக்க வீடு என்பதால் யாரையும் வெளியே போக சொல்லவில்லை. பொதுவாக பிரதமர் மோடி அவரின் வீட்டிற்கோ அல்லது ஏதாவது ஒரு இடங்களையோ பார்க்க சென்றால், அந்த பகுதியில் இருக்கும் பொது மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பை கருத்தை இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும். எஸ்பிஜி படையினர் முன்கூட்டியே சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள். ஆனால் இந்த முறை எஸ்பிஜி படையினர் பாதுகாப்பை உறுதி செய்து இருந்தாலும் ஹீராபென் இருந்த வீட்டில் இருந்து மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. பிரதமர் மோடி வீட்டிற்கு உள்ளே தனது தாய்க்கு இறுதி மரியாதை செய்தார். தாயின் காலை தொட்டு வணங்கி அவருக்கு இறுதி மரியாதை செய்தார். அப்போதும் கூட மக்கள் பலர் வீட்டிற்கு உள்ளேயே இருந்தனர்.

முக்கியமாக வீட்டின் படிக்கட்டுகளில் பெண்கள் பலர் வரிசையாக அமர்ந்து இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் மோடியின் தூரத்து உறவினர்கள் என்பதால் இவர்கள் உள்ளேயே அமர்ந்து இருந்தனர். அதன்பின் பிரதமர் மோடி தனது தாயின் உடலை சுமந்து சென்றார். ஹீராபென் மோடி அதன்பின் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்சில் பாதுகாப்பு கருதி மோடி மட்டுமே பின் பக்கம் அமர வைக்கப்பட்டார். பாதுகாவலர்கள் தொங்கியபடி வந்தனர். உள்ளே மோடி சோகமாக.. தனியாக.. தாயின் உடலுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்களின் மனங்களை உலுக்கி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version