Home உலகம் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். புற்றுநோய் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளதாக அவரது முகவர் மற்றும் அவரது குடும்பத்தினர்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரேசில் நாட்டவரான பீலே கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்றும், மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற வீரர் என்ற பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version