Home மலேசியா 28 கழிவுநீர் மாதிரிகளில் SARS-CoV-2 வைரஸ் கண்டறியப்பட்டது என்கிறார் சுகாதார தலைமை இயக்குநர்

28 கழிவுநீர் மாதிரிகளில் SARS-CoV-2 வைரஸ் கண்டறியப்பட்டது என்கிறார் சுகாதார தலைமை இயக்குநர்

கோலாலம்பூர்:

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் 31 வரை, கழிவு (சாக்கடை) நீரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கோவிட்-19 சுற்றுச்சூழல் கண்காணிப்பில் 96.5 சதவீதம் அல்லது அனைத்துலக நுழைவாயிலில் இருந்து (international entry points) எடுக்கப்பட்ட 29 கழிவுநீர் மாதிரிகளில் மொத்தம் 28 மாதிரிகளில் SARS-CoV-2 வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அனைத்து மாதிரிகளிலும் ஒமிக்ரோன் உருமாற்றக் கிருமிகள் இருப்பதை, தேசிய பொது சுகாதார ஆய்வு மையத்தின் சோதனை முடிவுகள் காட்டுவதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அவற்றில் ஒரு மாதிரி இன்னும் பரிசோதனையின் கீழ் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மொத்தம் 28 மாதிரிகளில் 15-தில்,அதாவது 53.6 விழுக்காடு மீதான பரிசோதனை, முழுமைப்பெற்று விட்டது என்றும் அவற்றில், BA.5, BA.2, BA.2.75 மற்றும் BA.2.12 உருமாற்ற நோய்க் கிருமிகள் இருந்தது கண்டறியப்பட்டதாக, இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் நோர் ஹிஷாம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version