Home மலேசியா மெனாரா மெர்டேக்கா 118 இன் கட்டிட உச்சியில் மீண்டும் அந்நிய நாட்டவர் ஊடுருவலா?

மெனாரா மெர்டேக்கா 118 இன் கட்டிட உச்சியில் மீண்டும் அந்நிய நாட்டவர் ஊடுருவலா?

உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடமான மெர்டேகா 118 உச்சியில் ஏறும் வீடியோவை ரஷ்யாவை சேர்ந்த தம்பதிகள் பதிவேற்றம் செய்து மலேசியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர் ஐசக் ரைட், ‘Driftershoots’ என்ற யூடியூப் கணக்கு மூலம் மெர்டேகா 118 கோபுரத்தில் ஏறும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

ஏழு நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் குறித்த வீடியோ, டிசம்பர் 30 அன்று பதிவேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது நண்பரும் மெர்டேக்கா 118 கோபுரத்தின் உச்சிக்கு ஏறுவதை அது காட்டுகிறது.

679 மீட்டர் உயரம் கொண்ட மெர்டேக்கா 118 புகைப்படம் எடுக்க தானும் தனது மூன்று நண்பர்களும் விமானத்தில் ஏறி கோலாலம்பூருக்கு வந்ததாக ஐசக் தெரிவித்தார்.

“கோபுர உச்சியை அடையும் பயணம் நீண்டது, கடினமானது மற்றும் சவால்கள் நிறைந்தது. பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்றும் இந்த ஆண்டை (2022) முடிக்க இது ஒரு பரிசாக இருந்தது” என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version