Home மலேசியா சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எதிர்மறை கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்: தியோங்

சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எதிர்மறை கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்: தியோங்

சீனாவில் கோவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எதிர்மறை கண்ணோட்டத்துடன் நடந்துகொள்ள வேண்டாம் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய கோவிட்-19 நிலைமையை அரசாங்கம் எப்போதும் அறிந்திருப்பதாகவும், தற்போதைக்கு, சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவோ, நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மேம்படுத்தவோ அல்லது சிறப்புக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

தரவுகளின் அடிப்படையில் சீனாவில் மொத்தம் 10.9 மில்லியன் கோவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அமெரிக்காவைப் பார்த்தால், அது 99 மில்லியனை கோவிட்-19 தொற்றுச் சம்பவங்களை எட்டியுள்ளது.

“எனவே, நாங்கள் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அது அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவில் இறப்பு விகிதமும் 1.08 மில்லியனை எட்டியுள்ளது, ஆனால் சீனாவில் இது 36,000 ஆக மட்டுமே உள்ளது. இருப்பினும், அரசாங்கம் கோவிட்-19 தொற்றுக்களை கண்காணித்து வருகிறது, ”என்றும் அவர் கூறினார்.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, குறிப்பாக நாட்டின் சுற்றுலாத் துறை இப்போது முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், SOP ஐப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், மலேசியர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தியோங் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இலக்கவியல் மற்றும் வழக்கமான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளை அமைச்சகம் தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version