Home Top Story பொருளாதார நெருக்கடி: ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இலங்கை

பொருளாதார நெருக்கடி: ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இலங்கை

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகோன் கூறியதாவது:- இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும். வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Previous articleகோவிட் தொற்றின் பாதிப்பு 287; மீட்பு 590
Next articleசீனாவில் ஒரே மாதத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்றுநோய்க்கு 60 ஆயிரம் பேர் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version