Home Top Story 50-ஆண்டுகளில் மிக மோசமாக சரிந்த சீன பொருளாதார வளர்ச்சி..!

50-ஆண்டுகளில் மிக மோசமாக சரிந்த சீன பொருளாதார வளர்ச்சி..!

சீனாவில் உருவானதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் விதிவிலக்கல்ல.

அங்கு கடந்தாண்டின் பொருளாதார வளர்ச்சி 3 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சியின் கீழ்நோக்கிய போக்காகும்.

2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) ஆகும். இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவடைந்துள்ளது என சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவைக் கண்டிருப்பதற்கு காரணம், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும், பொதுமுடக்கமும்தான்.

சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version