Home மலேசியா சட்டவிரோத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் போலீஸ்காரர்கள் உட்பட பலர் கைது

சட்டவிரோத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் போலீஸ்காரர்கள் உட்பட பலர் கைது

டுங்கூனில் ஒரு சட்டவிரோத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் போலீஸ்காரர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) புக்கிட் அமான் மற்றும் திரெங்கானு காவல்துறையினரால் “Ops Selendang” என்ற குறியீட்டு பெயரின் கீழ் மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் சங்கங்கள் சட்டம் 1966 இன் பிரிவு 43 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் டுங்கூன் மாவட்டத்தில் இந்த சட்டவிரோத அமைப்பு செயல்பட்டு வந்தது என அறியமுடிகிறது என்றும் இந்த கைது நடவடிக்கையினை திரெங்கானு மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ ரோஹைமி முகமட் ஈசாவை தொடர்பு கொண்டபோது, அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

மேலும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version