Home மலேசியா 2017 முதல் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மோசடி அழைப்புகளை MCMC தடுத்துள்ளது

2017 முதல் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மோசடி அழைப்புகளை MCMC தடுத்துள்ளது

கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு வரையான காலப்பகுதியில் 1.8 பில்லியன் மோசடி அழைப்புகளை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தடுத்துள்ளது என்று, தகவல் தொடர்பு மற்றும் இயக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

அத்தோடு 2018 ஆம் ஆண்டு முதல், மொத்தம் 300 மில்லியன் SMS மூலமான மோசடி செய்திகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்த பண்டிகைக் காலத்தில் தயவுசெய்து கவனமாக இருங்கள், ஏனெனில் இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி மோசடி செய்ப்பவர்கள் தயாராக இருப்பார்கள், உதாரணமாக பேஸ்புக்கில் ‘கிளீனர் ஸ்கேம்கள்’ போன்ற மோசடிகள் வெளியாகும் ” என்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை MCA ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

மோசடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள், 997 என்ற எண்ணில் தேசிய மோசடி பதில் மையத்தை தொடர்பு கொள்ளுமாறும், இது மோசடியை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் பணத்தை இழப்பதைத் தடுக்கவும் உதவும், எனவே முடிந்தவரை புகாரளிக்குமாறும் ஃபாஹ்மி அறிவுறுத்தினார்.

Previous articleபானை வயிற்றில் இருக்கும் போலீஸ்காரர் குறித்து எழுந்திருக்கும் விமர்சனங்கள்
Next articleபாஸ் மாநிலங்களில் தனித் தேர்தல்கள் அதிக செலவாகும் என்கிறார் அன்வார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version