Home மலேசியா நிலச்சரிவு காரணமாக ரானாவ்-சண்டகான் சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது

நிலச்சரிவு காரணமாக ரானாவ்-சண்டகான் சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவினால், சாலையில் மரங்கள் விழுந்து பாதையை அடைத்ததன் காரணமாக ஜாலான் ரானாவ் -சண்டாக்கான் சாலை அனைத்து வாகனங்களும் மூடப்பட்டுள்ளது என்று சபா பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது.

குறித்த சாலை மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளைத் திருப்பிவிட மாற்று சாலை இல்லை என்றும், தற்போது துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

ரானாவின் KM167.9 இலுள்ள Taviu வனப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அது மேலும் கூறியது.

“நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Previous articleகோவிட் பாதிப்பு 269; மீட்பு 285
Next articleமுதலை தாக்குதலுக்குப் பின் காணாமல் போன செம்பொர்னா தோட்டத் தொழிலாளி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version