Home மலேசியா மாரடைப்பால் சரிந்து விழுந்த பூப்பந்து வீரரை CPR முதலுதவி மூலம் காப்பாற்றிய பெண்

மாரடைப்பால் சரிந்து விழுந்த பூப்பந்து வீரரை CPR முதலுதவி மூலம் காப்பாற்றிய பெண்

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) மலாக்காவின் Durian Daun நடந்த பூப்பந்து போட்டியின் போது, மாரடைப்பு ஏற்பட்டதாக நம்பப்பட்ட ஒரு வீரரின் உயிரை CPR முதலுதவி மூலம் காப்பாற்றிய ஒரு பெண்ணின் நடவடிக்கை அனைவராலும் போற்றப்படுகிறது.

நேற்றிரவு 9 மணியளவில் நடந்த மூத்த ஆண்கள் இரட்டையர் பூப்பந்து காலிறுதிப் போட்டியின் போது, கோத்தா பாரு ஆசிரியர் கல்வி நிறுவனத்தை (IPG) பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிக்கொண்டிருந்த 55 வயது வீரரே திடீரென மாரடைப்பு வந்து மயங்கி சரிந்தார்.

அப்போது, மலாக்கா தெங்கா St John Ambulance Malaysia (SJAM) சங்கத்தின் தலைவரான கிறிஸ்டின் தான் ஏய் தெங், 55 என்ற பெண் துரிதமாக செயற்பட்டு, உடனடியாக அவருக்கு CPR முதலுதவியை செய்தார். “அந்த நபருக்கு உதவ முடிந்ததற்கு உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார், மேலும் அந்த ஆடவரின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டது” என்றும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version