Home Top Story ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ‘நாணய’ அளவிலான சிறிய கதிரியக்க குப்பி… ஆயிரத்து 400 கி.மீ தூரம் ...

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ‘நாணய’ அளவிலான சிறிய கதிரியக்க குப்பி… ஆயிரத்து 400 கி.மீ தூரம் தேடுதல்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ரியோ டிண்டோ. இந்த நிறுவனம் பல்வேறு இடங்களில் நிலக்கரி உள்பட பல்வேறு கனிமங்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, சுரங்க பணியின்போது கனிமத்தின் தன்மையை அளவிடும் கருவியில் சிறிய அளவிலான கதிரியக்க குப்பி பயன்படுத்தப்படுகிறது.

அந்த குப்பியில் சிறிய அளவில் சிசியம் -137 என்ற தனிமம் உள்ளது. இந்த அதனிமம் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும், மனிதர்கள், பிற உயிரிழினங்களில் தோலில்பட்டால் பாதிப்பு மட்டுமின்றி தீக்காயம் ஏற்படும். இந்த கதிரியக்க குப்பியில் இருந்து கதிரிக்கம் வெளியானால் கேன்சர் கூட வரலாம் என்ற ஆபத்து இருந்தது. இந்த குப்பி 8 மில்லி மீட்டர் நீளமும், 6 மில்லிமீட்டர் சுற்றவும் கொண்டதாகும். இது ஒரு ரூபாய் நாணய அளவிலேயே இருக்கும்.

இந்த சூழ்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பெராவில் சுரங்கப்பகுதியில் இருந்து கடந்த மாதம் 12-ம் தேதி கதிரியக்க குப்பிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆயிரத்து 400 கிலோட்டர் தொலையில் வடமேற்கே பெர்த் நகரில் உள்ள ரியோ டிண்டோ கனிம நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கிற்கு சரக்கு லோரி வந்தது.

அங்கு பொருட்கள் இறக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த 25-ம் தேதி பொருட்களை பிரித்து பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே ஒரு கதிரியக்கக்குப்பி மாயமானது. ஆபத்தை விழைவிக்கக்கூடிய கதிரியக்க குப்பி என்பதால் ரியோ டிண்டோ சுரங்க நிறுவன ஊழியர்கள் பேரதிச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கதிரியக்க குப்பியை ஏற்றி வந்த லாரி பயணித்த ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரத்தையும் அலசி ஆராய பல்வேறு துறையினரும் களமிறக்கப்பட்டனர். அணு சக்தி துறை விஞ்ஞானிகள், அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கதிரியக்கத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் கருவிகள் உள்பட அதிநவீன கருவிகளுடன் கடந்த சில நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

கிட்டத்தட்ட கோலிக்குண்டு அளவிலான இந்த குப்பியை தேடும்பணி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தேடுதலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிதீவிர தேடுதலுக்கு பின் மாயமான கதிரியக்க குப்பி இன்று கண்டுபிடிக்கப்பட்டது. கதிரியக்கத்தை கண்டறிய பயன்படுத்தப்படும் அதிநவீன கருவிகளை கொண்ட வாகனத்தில் மனிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் சென்றபோது பில்பெராவி நகரத்தில் நியூமென் என்ற சிறிய கிராமத்தின் அருகே வனப்பகுதியில் அந்த குப்பியில் இருந்து வந்த கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சாலையோரம் இறங்கிய தேடுதல், மீட்புக்குழுவினர் நவீன கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் கதிரியக்க குப்பி சாலையோரம் கிடந்தது. கதிரியக்க குப்பியை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பயணித்த சாலை ஓரம் 2 மீட்டர் (7 அடி) தூரத்தில் கதிரியக்க குப்பி மண்ணுக்குள் கிடந்தது. இதையடுத்து அந்த கதிரியக்க குப்பியை கைப்பற்றிய

மீட்புக்குழுவினர் குப்பியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். கதிரியக்க குப்பியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் மட்டுமின்றி உலகையே அலறவிட்ட சிறிய கதிரியக்க குப்பி பலநாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஆஸ்திரேலிய அரசு, விஞ்ஞானிகள், தேடுதல் குழுவினர் பொதுமக்கள் மிகுந்த நிம்மதியடைந்துள்ளனர்

Previous articleகோவிட் தொற்றின் பாதிப்பு 325
Next articleOngkili சபா எரிசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version