Home மலேசியா கெடாவைத் தொடர்ந்து பினாங்கு மாநிலமும் வெள்ளத்தால் பாதிப்பு

கெடாவைத் தொடர்ந்து பினாங்கு மாநிலமும் வெள்ளத்தால் பாதிப்பு

கெடாவில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, நேற்று மாலை 3.30 மணி முதல் பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையை காரணமாக, பினாங்கு மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி, ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் வட செபெராங் பிறை மாவட்டத்தில் உள்ள Dewan Komuniti Kubang Menerong கிலுள்ள நிவாரண மையத்திலும், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் வட செபெராங் பிறையிலுள்ள (SK) Bakap Indah in Seberang Perai Selatan இலுள்ள நிவாரண மையத்திலும் தஞ்சமடைந்துள்ளதாக மாநில சுற்றுச்சூழல் மற்றும் நலக் குழுத் தலைவர் பீ பூன் போ தெரிவித்தார்.

“பினாங்கில் ஏற்பட்ட உயர் அலை எழுச்சி காரணாமாக வெள்ள நிலைமை மோசமடைந்தது. பெரும்பாலான வீடுகள் 0.6 மீட்டர் வரை வெள்ளத்தில் மூழ்கின, ஆனால் நேற்று இரவு பல பகுதிகளில் வெள்ளம் குறையத் தொடங்கியது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், கெடா வில் 35 பேரும் மற்றும் சரவாக்கில் 193 பேரும் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் அதே நேரத்தில் ஜோகூரில் 821 பேராக குறைந்துள்ளதுடன் சபாவில் 298 பேராக இன்று காலை குறைந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version