Home மலேசியா சமூக நலப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 141,144 இல்லத்தரசிகள் பதிவு – மனிதவள அமைச்சர்

சமூக நலப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 141,144 இல்லத்தரசிகள் பதிவு – மனிதவள அமைச்சர்

சமூக நலப் பாதுகாப்பு திட்டத்தின் (SSO) கீழ், டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திம் (SKSSR) தில் இதுவரை மொத்தம் 141,144 இல்லத்தரசிகள் பதிந்துகொண்டுள்ளதாக, மனிதவள அமைச்சர், வி. சிவகுமார் கூறினார்.

இதில் 135,281 பேர் இல்லத்தரசிகள் e-Kasih யில் பதிவு செய்துள்ளதுடன், ஊழியர்களின் சேமிப்பு நிதியின் (EPF) i-Suri திட்டத்தில் பங்களிக்கின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் e-Kasih யில் பதிவு செய்துள்ள இல்லத்தரசிகளுக்கும், i-Suri திட்டத்தின் கீழ் EPF பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“மனிதவள அமைச்சகம், பல்வேறு தரப்பினருடன் இணைந்து மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என்பன அதிகளவான இல்லத்தரசிகள் SKSSR சமூக நலப் பாதுகாப்பைப் பற்றி புரிந்துகொள்வதற்கு வழி செய்தது என்றும், இவ்வாறான முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையை அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமீனின் முழு ஆதரவுடன் இன்று வெளியீடு கண்ட சமூக நலப் பாதுகாப்புத்திட்டத்தின் SKSSR இன் அதிகாரப்பூர்வமான விழா மற்றும் MyFutureJobs 2023 தொழில் திருவிழாவில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்திய தெற்கு ஆசிய பிராந்திய நாடுகளில் மலேசியா முதல் நாடு என்றும் உலகில் நான்காவது நாடு என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version