Home Top Story யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக பணியாற்றிய சூசன் வோஜ்சிக்கி என்பவர் நேற்று பதவி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து,அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் தேர்வாகி உள்ளார்.

நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பணியாற்றினார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில், மற்றுமொரு முன்னணி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆடவரை கொலை செய்ததாக அவரின் மனைவி லட்சுமி தேவி மற்றும் வருண் குமார் மீது குற்றச்சாட்டு
Next articleஆறு வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version