Home மலேசியா தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தொகுதி காலியானதை அறிவிக்க முடியும் மாறாக சபாநாயகர் அல்ல என்கிறார் ஹருமைனி...

தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தொகுதி காலியானதை அறிவிக்க முடியும் மாறாக சபாநாயகர் அல்ல என்கிறார் ஹருமைனி ஓமர்

தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்பட்டதாகவும், பத்தாங் காலி தொகுதி காலியானதாகவும் சிலாங்கூர் மக்களவை சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று, சிலாங்கூர் பெஜுவாங் கட்சியின் தலைவர் ஹருமைனி ஓமர் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்த வரையில், ஒரு இடம் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் (EC) மட்டுமே அறிவிக்க முடியும், மாறாக சபாநாயகர் இல்லை ” என்று அவர் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களாக எந்த முன்னறிவிப்பும் இன்றி, சட்டமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாததால், ஹருமைனியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்பட்டதாகவும், அவரது சட்டமன்ற தொகுதியான பத்தாங் காலி காலியானதாகவும் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் Ng Suee Lim அறிவித்தார்.

மேலும் பத்தாங் காலி தொகுதி தற்போது காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கும் தாம் அறிக்கை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் கடந்த ஆண்டு நடந்த சிலாங்கூர் சட்டமன்றத்தின் மூன்றாவது அமர்வு, அதாவது “நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலான மூன்றாவது கூட்டத்தில் மட்டுமே நான் கலந்து கொள்ளவில்லை,” என்று ஹருமைனி தெரிவித்தார்.

அதைக் கருத்தில் கொண்டு, “பத்தாங் காலி தொகுதி இருக்கை காலியாகிவிட்டதாக அறிவித்ததை, சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும், தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஹருமைனி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version