Home மலேசியா சபா சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவர் அம்னோவில் இருந்து விலகி GRS கட்சியில் இணைவு

சபா சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவர் அம்னோவில் இருந்து விலகி GRS கட்சியில் இணைவு

ஐந்து சபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அக்கட்சியில் இருந்து விலகி Gagasan Rakyat Sabah கட்சியில் இணைந்துள்ளனர்.

சிண்டுமின் சட்டமன்ற உறுப்பினர்களான டத்தோ டாக்டர் யூசோப் யாக்கோப், டத்தோ ஜேம்ஸ் ரதிப் (சுகுட்), டத்தோ ஜஸ்னி தாயா (பந்தாய் டாலிட் ), டத்தோ முகமட் அர்சாத் பிஸ்தாரி (தெம்பாசுக்) மற்றும் டத்தோ ஹமில்ட் @ ஹமீட் அவாங் (பாலுங்) ஆகிய ஐவருமே அம்னோவில் இருந்து விலகி GRS கட்சியில் இணைந்தனர்.

அவர்களைத்தவிர மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் வாரிசான் கட்சியின் பிரதிநிதிகளுமான, பாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமட் மொஹமரின், நோராஸ்லினா ஆரிஃப் (குனாக்) மற்றும் சோங் சென் பின் (தஞ்சோங் கபூர்) ஆகியோரும் வாரிசான் கட்சியிலிருந்து விலகி GRS கட்சியில் இணைந்தனர்.

நேற்று GRS கட்சியில் இணைந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஒரு ஊடக மாநாட்டில் பேசிய யூசப், ” நாட்டிலும் சபாவிலும் அரசியல் ஸ்திரத்தன்மை தேவைப்படுவதால், அம்னோவில் இருந்து வெளியேறி GRS கட்சியில் சேர முடிவெடுத்ததாக கூறினார். மேலும் மலேசியா ஒப்பந்தம் 1963 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாநில உரிமைகளை வென்றெடுக்க அனைத்து தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும் நீடிக்கும் அரசியல் மோதல்கள் சபாவின் வளர்ச்சியைத் தடுக்கும், எனவே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்றார்.

“GRS கட்சியில் இணைவதற்கான எங்கள் முடிவைத் தொடர்ந்து அம்னோவின் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

Previous articleஅமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள்: பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் பலி
Next articleவான் சைஃபுல் வான் ஜானின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version