Home மலேசியா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்

செகாமாட்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், Sekolah Kebangsaan Gemereh தற்காலிக நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்தித்தார். 32 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் தங்கியிருந்த நிவாரண மையத்தில் அன்வார் காலை 11.20 மணிக்கு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் செலவிட்டார். அவர்கள் தங்குமிட வசதிகளையும் அதே வேளை சமூக நலத் துறை (JKM) மூலம் நடத்தப்படும் மையத்தில் உள்ள குழந்தைகளுக்கான கல்வி உளவியல் செயல்பாடு அறையையும் அவர் ஆய்வு செய்தார்.

நாட்டின் மிக சிறந்தத் தலைவரை நெருக்கமாகச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்த முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட, மையத்தில் தங்கியிருந்தவர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். முன்னதாக அன்வாருக்கு Royal Artillery Regiment (4 RAD), செகாமட் முகாமில் மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Sekolah Jenis Kebangsaan Cina (SJKC) (SJKC) Kampung Tengah நிவாரண மையத்தில் தங்கியிருப்பவர்களை அவர் சந்திக்கவிருக்கிறார். இந்த மையத்தில் 133 குடும்பங்களைச் சேர்ந்த 502 பேர் தங்கியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,860 ஆக அதிகரித்துள்ளது, பத்து பஹாட் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாநிலத்தில் உடனடித் தேவைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு RM50 மில்லியன் வெள்ள நிவாரணத்தை ஜோகூருக்கு அனுப்பும் என்று அன்வார் முன்பு கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version