Home மலேசியா 2023 OCBC சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை முன்னிட்டு கோலாலம்பூர் நகர மையத்தில் 18 முக்கிய சாலைகள்...

2023 OCBC சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை முன்னிட்டு கோலாலம்பூர் நகர மையத்தில் 18 முக்கிய சாலைகள் மூடப்படும்

2023 OCBC சைக்கிள் கோலாலம்பூர் (KL) சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுக்காக தலைநகரைச் சுற்றியுள்ள மொத்தம் 18 முக்கிய சாலைகள் மார்ச் 12 அன்று மூடப்படும் என்று, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், துணை ஆணையர் சரிஃபுடின் முகமட் சாலே தெரிவித்துள்ளார்.

ஜாலான் ராஜா, ஜாலான் ராஜா லாவூட், ஜாலான் பேராக், ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் கான்லே, ஜாலான் ஸ்டோனர், ஜாலான் கியா பெங், ஜாலான் பி. ராம்லீ, ஜாலான் அம்பாங், ஜாலான் புத்ரா, ஜாலான் துன் இஸ்மாயில், ஜாலான் சுல்தான் சலாவுதீன், ஜாலான் கூச்சிங், ஜாலான் கினாபாலு, ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின் மற்றும் ஜாலான் ராஜா ஆகிய சாலைகளை உள்ளடக்கிய இந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வானது, டத்தாரான் மெர்டேக்காவில் முடிவடையும் என்று அவர் கூறினார்.

“எனவே மூடப்படும் சாலைகளை பயன்படுத்துவோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், கடமையில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

“மொத்தம் 144 போக்குவரத்து போலீசார் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை சுமூகமாக நடத்துவதற்கு உதவுவார்கள்,” என்று அவர் இன்று, சைக்கிள் ஓட்டுதல் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version