Home மலேசியா சிகாமாட்டில் வெள்ளத்திற்கு பின்னர் பள்ளியை சுத்தம் செய்துகொண்டிருந்த பயிற்சி ஆசிரியர் மின்சாரம் தாக்கி மரணம்

சிகாமாட்டில் வெள்ளத்திற்கு பின்னர் பள்ளியை சுத்தம் செய்துகொண்டிருந்த பயிற்சி ஆசிரியர் மின்சாரம் தாக்கி மரணம்

வெள்ளத்திற்கு பின்னர் சிகாமாட்டிலுள்ள செக்கோலா கெபாங்சான் (SK) போக்கோவில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கையின்போது, கோலாலம்பூர் சர்வதேச மொழி வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் (IPG) பயிற்சி பெற்று வரும் ஆசிரியர் ஒருவர், இன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

காலை 9.50 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியரான சைபுல் அஸ்ரப் முக்தார், 21, என்ற வெள்ளம் காரணமாக மேசை நாற்காலிகளை சுத்தம் செய்ய கணினி ஆய்வக அறைக்கு வெளியே இருந்ததாகக் கூறப்படுகிறது என்று, சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ஜம்ரி மரின்சா கூறினார்.

வெள்ளம் வடிந்த பிறகு, பள்ளியை சுத்தம் செய்ய உதவுவதற்காக IPG பயிற்சியாளர்களின் குழுவுடன் பாதிக்கப்பட்டவர் பள்ளிக்கு வந்தார் என்றும், சம்பவத்திற்கு முன், பாதிக்கப்பட்டவர் ‘வாட்டர் ஜெட்’ மூலம் மாணவரின் மேசை நாற்காலியை சுத்தம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

“திடீரென்று ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர் சரிந்தார்,” உடனே அருகிலிருந்த அவரது நண்பர்கள் சிலர் சுவாச உதவியை (CPR) வழங்கினர்.

“தலையில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சிகாமாட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டது ,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version