Home மலேசியா மலேசியாவில் நீர் பற்றாக்குறை எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார் பிரதமர்

மலேசியாவில் நீர் பற்றாக்குறை எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார் பிரதமர்

ஆண்டு முழுவதும் போதிய மழை பெய்யும் மலேசியாவிற்கு தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வறட்சிக் காலத்திலும் நாட்டில் போதிய நீர் விநியோகம் இருக்க வேண்டும் என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளதுடன், வறண்ட காலநிலையின் போது ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் பிரதமர் பணித்துள்ளார்.

ஜோர்டானில் ஆலிவ் பண்ணை நடத்தி வரும் தனது நண்பர் ஒருவரைப் பற்றி பேசுகையில், வறட்சியின் போது தண்ணீர் பற்றாக்குறைத் தடுக்க அங்கு தொழில்நுட்பம் மற்றும் புதிய முறைகள் உள்ளன என்று தான் நம்புவதாக அன்வார் கூறினார்.

ஜோர்டானில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மழை பெய்கிறது, ஆனால் அவரால் அங்கு இன்னும் ஆலிவ் பயிரிட முடிகிறது. அங்கு மழைநீரை ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்த சில முறைகளைப் பயன்படுத்துகிறார்.

“ஆனால் மலேசியாவில் வறட்சியின் போது தண்ணீர் இல்லை, ஆனால் எங்களுக்கு வெள்ளம் உள்ளது. இதில் அர்த்தமில்லை. இங்கு நாம் தண்ணீரை சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை” என்று நேற்று இந்தரா முலியா ஸ்டேடியத்தில் நடந்த உலக தண்ணீர் தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்து, உரையாற்றும்போது பிரதமர் கூறினார்.

எனவே மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் முறைகளைப் நாம் படிப்பது உட்பட, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளைக் கண்டறிய தான் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அன்வார் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version