Home மலேசியா RM150 கல்வி நிதி உதவியை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிட அரசு ஆலோசனை

RM150 கல்வி நிதி உதவியை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிட அரசு ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை RM150 -ஐ மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆலோசித்து வருவதாக, துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் மாணவர்களுக்கான உதவித்தொகையை தலைமை ஆசிரியர் வங்கியிருந்த மீட்டபோது, RM100,000 மதிப்புள்ள தொகை திருடப்பட்ட சம்பவம் போன்று மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை தமது அமைச்சு பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

“இருப்பினும், இவ்வாறு செய்யப்பட்டால் வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்வதற்கு அதிக சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று, இன்று புதன்கிழமை (மார்ச் 15) நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமைவின்போது அவர் கூறினார்.

அப்போது முன்னாள் கல்வி அமைச்சரான முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் (BN -புத்ராஜெயா) குறுக்கிட்டு, கோவிட்-19 தொற்றுநோய் கால கட்டத்தின் போது, குறித்த உதவித்தொகை மாணவர்களின் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதாகக் கூறியதுடன், இதனை செயற்படுத்த காலக்கெடு உள்ளதா?” என்றும் அவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த லிம், தற்போது 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தமது பெற்றோருடன் கூட்டாக உள்ள வங்கிக் கணக்குகளில் இந்த உதவித் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

மேலும், “என்னால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது. ஆனால் அது செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் நாங்கள் மாணவர்களை (கணக்கு வைத்திருப்பவர்களை) கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் அவர்களை ஊக்குவிக்க மட்டுமே முடியும். மேலும் உதவி விநியோக செயல்முறையை மேம்படுத்துவது குறித்து பெற்றோரிடமிருந்து கருத்துக்களையும் பெற்றோம்,” என்று அவர் கூறினார்.

பள்ளிகளில் பணத்தைக் கையாளும் போது, பள்ளி முதல்வர்கள் SOP ஐப் பின்பற்றுவதை உறுதிசெய்ய அமைச்சகம் எப்போதும் ஊக்கிவிப்பதாக லிம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version