Home மலேசியா 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகளை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

1.5 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகளை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

ஜோகூர் :

RM1.55 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 42 முதல் 58 வயதுடையவர்கள் என்றும், நேற்று செவ்வாய்கிழமை (மார்ச் 14) காலை 10 மணியளவில், தாமான் ஜோகூரில் ஒரு களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்ட வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், ஜோகூர் காவல்துறைத் தலைவர் கம்யூன் டத்தோ கமருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

“அவர்களிடமிருந்து பல்வேறு பிராண்டுகளின் 136 அட்டைப்பெட்டிகள் கொண்ட சட்டவிரோதமான சிகரெட்டுகளை நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்று அவர் கூறினார்.

“விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர்கள் எங்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர், அங்கு மேலும் 71 அட்டைப்பெட்டிகள் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன” என்று புதன்கிழமை (மார்ச் 15) தம்போயில் உள்ள கடற்படை போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கமாருல் ஜமான் கூறினார்.

கடந்த ஒரு மாத காலமாக சந்தேகநபர்கள் குறித்த சட்ட விரோத நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறிய அவர், இந்த பறிமுதலே இந்த வருடத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய கைப்பற்றல் ஆகும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version