Home மலேசியா ஃபத்தேஹின் தாய் எங்கே? தேடும் சிப்பாங் சமூக நலத்துறை

ஃபத்தேஹின் தாய் எங்கே? தேடும் சிப்பாங் சமூக நலத்துறை

புத்ராஜெயா: பிறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண் குழந்தையின் தாயாரை கண்டறிய பொதுமக்களின் உதவியை சிப்பாங் சமூக நலத்துறை (JKM) கேட்டுக்கொள்கிறது.

குழந்தை தனது உயிரியல் தாயால் பிப்ரவரி 12 அன்று சரவாக்கைச் சேர்ந்த ஜெசிகா என அழைக்கப்படும் டெங்கிலில் உள்ள ஒரு பெண்ணிடம்  ஒப்படைக்கப்பட்டதாக JKM சிப்பாங் சமூக நலத்துறை அதிகாரி  அமீர் இஸ்ஸாட் நோர்டின் கூறினார்.

அவரது கூற்றுப்படி, குழந்தையின் உயிரியல் தாய் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்றும் முஸ்லிம் என்றும் அந்தப் பெண் தெரிவித்தார். எனினும், குழந்தையை ஒப்படைத்த பின்னர் குழந்தையின் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முகமட்  ஃபத்தேஹ் என்று பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்ததாகவும், இப்போது JKM பராமரிப்பில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version