Home Top Story பிரான்சில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

பிரான்சில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்ற வழிவகை செய்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களும் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தலைநகரான பாரீசில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் நகரின் முக்கிய சாலைகள், வீதிகள் குப்பைகளால் நிரம்பி துர்நாற்றம் அடிக்கிறது. சுமார் 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Previous articleஒற்றுமை அரசாங்கம் நிலையாக உள்ளது; முதலீட்டை கவருகிறது என்கிறார் அன்வார்
Next articleதாய், மாற்றாந்தந்தையால்பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கற்றல் குறைப்பாடுடைய பெண் காவல்துறையால் மீட்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version