Home Top Story இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 5 இலட்சம் யூரோக்களுக்கு மேல் செலவு- அறிக்கை

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 5 இலட்சம் யூரோக்களுக்கு மேல் செலவு- அறிக்கை

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version