Home உலகம் சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் தானியக்க முறையில் ஏற்பட்ட தடங்கல்- தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்கிறது ICA

சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் தானியக்க முறையில் ஏற்பட்ட தடங்கல்- தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்கிறது ICA

நேற்று சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச்சாவடிகளின் தானியக்க முறையில் ஏற்பட்ட தடங்கலுக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இயந்திரங்களில் வழக்கமான மேம்பாட்டுப் பணிகளைச் செய்யும் நேரத்தில் தொழில்நுடபக் கோளாறு நேர்ந்ததாக ICA ஆணையம் கூறியது.

நேற்று (31 மார்ச்) சுமார் 4 மணிநேரத்திற்குக் கோளாறு நீடித்தது. இதனால் சாங்கி விமான நிலையத்திலும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க நேர்ந்தது.

நேற்று மாலை சுமார் 4 மணிக்கு சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பியது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக ICA ஆணையம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அத்தோடு இக்கட்டான நேரத்தில் பொறுமையாக இருந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த பயணிகளுக்கு அது நன்றி கூறியது.

மேலும் மீண்டும் இதுபோன்ற கோளாறு நேராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது உறுதியளித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version