Home மலேசியா நோன்புப் பெருநாளுக்கு பின் கோழியின் உச்ச வரம்பு விலை மறுஆய்வு செய்யப்படும் -டத்தோஸ்ரீ சலாவுதீன்

நோன்புப் பெருநாளுக்கு பின் கோழியின் உச்ச வரம்பு விலை மறுஆய்வு செய்யப்படும் -டத்தோஸ்ரீ சலாவுதீன்

கோழியின் உச்சவரம்பு விலையை மறுஆய்வு செய்வதற்கான விவாதம் நோன்புப் பெருநாளுக்குப் பிறகுதான் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் கூறுகிறார்.

கோழி இறைச்சி போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தனது அமைச்சகமும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகமும் (MAFS) இணைந்து செயல்பட்டு வருவதாகவும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர், கூறினார்.

“இப்போது எங்களின் நோக்கம், ரமலான் நோன்பு மாதம் மற்றும் நோன்பு பெருநாளின் போது, போதுமான அளவு கோழி விநியோகம் மற்றும் உச்சவரம்பு விலையில் அவை விற்கப்படுவதை உறுதி செய்வதாகும்.

“விலைகள் மற்றும் பொருட்கள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக தமது அமைச்சகம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் தினசரி சோதனைகளை நடத்தியது,” என்று அவர் நேற்று, இங்குள்ள அப்டவுன் பாண்டானில் உள்ள ஹ்வா தாய் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஜுலான் ரஹ்மா தொகுப்பை வெளியிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ரமலான் பசார் மற்றும் வரவிருக்கும் நோன்புப் பெருநாளின் போதுள்ள அதிக தேவை காரணமாக கோழி மற்றும் முட்டைகளின் விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறையினர் KPDN க்கு தகவல் தெரிவித்தனர் என்று சலாவுதீன் கூறினார்.

ஹரி ராயாவுக்குப் பிறகு உச்சவரம்பு விலையை மறுபரிசீலனை செய்ய KPDN மற்றும் MAFS ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளனவா என்று கேட்டதற்கு, பதிலளித்த சலாவுதீன், இந்த விஷயத்தை அமைச்சரவைக்குக் கொண்டு வருவதற்கு முன் அமைச்சகம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களையும் முதலில் விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்றார்.

மேலும் “கோழியின் உச்சவரம்பு விலையை ஏன் அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் அமைச்சரவைக்கு உணர்த்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version