Home மலேசியா ஒப்பந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனை சுமூகமாக இயங்குகிறது

ஒப்பந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனை சுமூகமாக இயங்குகிறது

இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 3) காலை திட்டமிடப்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜோகூரில் உள்ள பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றான சுல்தானா அமினா (HSA) மருத்துவமனை வேலைநிறுத்தத்தின் எந்த அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வழக்கம் போல் செயல்படுவதாகத் தெரிகிறது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, அதன் பிரதான லாபி மற்றும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் சாதாரணமாகச் செயல்படுவதைக் காணமுடிகிறது.

இன்று காலையில் மழை பெய்ததன் காரணமாக சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், மருத்துவமனையின் பிரதான லாபியிலோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவிலோ நோயலாளர்கள் சிகிச்சைக்காகக் காத்திருப்பதைக் காண முடியவில்லை.

Mogok Doktor Malaysia இயக்கத்தால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மருத்துவமனைகளில் சுல்தானா அமினா (HSA) மருத்துவமனையும் ஒன்று என்று முன்னர் கூறப்பட்டது.

குறித்த அமைப்பு இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 3) முதல் புதன்கிழமை வரை (ஏப்ரல் 5) ஒப்பந்த மருத்துவர்கள் அனைவரும் அவசர விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு எடுத்து, வேலை நிறுத்தத்தில் இணையுமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தது.

அதுமட்டுமின்றி, இந்த மாதத்திற்குள் சுமார் 3,000 ஒப்பந்த மருத்துவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக Mogok Doktor Malaysia இயக்க அமைப்பாளர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version