Home மலேசியா 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய EPF சந்தாதாரர்கள் ஏப்ரல் 7 முதல் வங்கிக்...

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய EPF சந்தாதாரர்கள் ஏப்ரல் 7 முதல் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்கள் சேமிப்பு வைப்பு நிதியின் (EPF) சந்தாதாரர்கள், மற்றும் கணக்கு 2 இல் குறைந்தபட்ச இருப்பு RM3,000 உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 7 முதல் வங்கிக் கடனைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று EPF தெரிவித்துள்ளது.

இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும், தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் சந்தாதாரர்கள், MBSB வங்கி மற்றும் Bank Simpanan Nasional (BSN) ஆகிய வங்கிகள் மூலம் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, EPF இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பங்குபெறும் வங்கிகளால் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் அல்லது இலாப விகிதம் (இஸ்லாமிய) மிகக்குறைவாக 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை, நியாயமான முறையில் குறித்த வங்கிகளால் வழங்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.

“ஏப்ரல் 7, 2023 இல் தொடங்கும் திட்டத்தின் 1 ஆம் கட்டத்தின் போது, ​​40 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள தகுதியுள்ள சந்தாரர்கள், இத்திட்டத்தில் பங்கேற்கும் வங்கிகளின் வரையறைகளுக்கு உட்பட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

“40 வயதுக்குட்பட்ட சந்தாரர்களுக்கான 2 ஆம் கட்டத்திற்கான தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Previous articleATM இயந்திரத்தின் திரையை அடித்து உடைத்த ஆடவர் கைது
Next articleசட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக 52 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version