Home மலேசியா Mogok Doktor Malaysia அமைப்பின் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்கு செயலிழப்பு

Mogok Doktor Malaysia அமைப்பின் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்கு செயலிழப்பு

ஏப்ரல் 3 முதல் 5 ஒப்பந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அச்சுறுத்திய Mogok doctor Malaysia அமைப்பு, அதன் திட்டமிட்ட வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 3) தனது இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்ததாகத் தெரிகிறது.

இந்தக் குழு வேலைநிறுத்தம் தொடர்பான தகவல்களைப் பரப்புவதற்கு இந்தக் கணக்கைப் பயன்படுத்தியது.

முன்னதாக, Mogok Doktor Malaysia அமைப்பின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்ததாக பல ஊடகங்கள் செய்தி, அறிக்கைகள் வெளியிட்டிருந்தபோதிலும், “வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்துவிட்டதாக” அவ்வமைப்பு கூறியது.

ஆனால் உண்மையில் நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் செயற்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் இருந்தது.

டாக்டர் ஜமால் என்று மட்டுமே அறியப்படுகின்ற ஒருவர் தன்னை குறித்த Mogok Doktor Malaysia அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக்கொண்டதுடன், சுமார் 3,000 மருத்துவர்கள் இந்த மறியலில் பங்கேற்றதாகவும், நேற்று தங்களின் முதல் நாள் வேலை நிறுத்தம் வெற்றிதளித்தது என்றும் கூறினார்.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று அவ்வமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version