Home மலேசியா ஆடை திருடிய நபருக்கு ஒரு மாதம் சிறை, RM6,000 அபராதம்

ஆடை திருடிய நபருக்கு ஒரு மாதம் சிறை, RM6,000 அபராதம்

கடந்த வாரம் RM1,930 மதிப்புள்ள ஐந்து ஜோடி பாஜூ மெலாயுவை திருடியதற்காக, கோலாலம்பூர் மாவட்ட நீதிமன்றம் ஆடவர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் RM6,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.

குற்றம் 54 வயதான சைபுலிசான் முகமட் யூசோப் என்பவர், ஜாலான் அம்பாங்கிலுள்ள Avenue K வணிக வளாகத்தில், Haute & Gold Trendstop எனும் கடையிலிருந்து, ஏப்ரல் 9 மற்றும் 10 தேதிகளில் 1 மணி முதல் 7 மணி வரையான நேரத்திற்கு இடையில், பாஷா பிராண்டின் பாஜூ மெலாயுவைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. சைபுலிசான் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு எதிரான தண்டனையை
மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூருல் இஸ்ஸா ஷஹாருதீன் வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் உண்மைகளின்படி, ஏப்ரல் 9 ஆம் தேதி, மதியம் 1 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த கடைப் பகுதிக்கு சென்று, மூன்று ஜோடி பாஜூ மெலாயுவை எடுத்து, பின்னர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு, ஆடைகளுக்கான கட்டணம் எதுவும் செய்யாமல் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அவற்றை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உணவு மற்றும் மருந்துகளை வாங்க பயன்படுத்தினார்.

மறுநாள், ஏப்ரல் 10ம் தேதி மாலை, 5.20 மணிக்கு, மீண்டும் அதே கடைக்குச் சென்று, இரண்டு ஜோடி பாஜூ மெலாயுவை எடுத்து, அதே முறையில் எடுத்துச் சென்று, விற்பனை செய்தார், அதே நாளில், இரவு, 7 மணிக்கு, மீண்டும் ஒருமுறை திருட முயன்றார், ஆனால் அவர் அந்தக் கடைக்காரர்களால் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version