Home மலேசியா பண்டிகைக் காலங்களில் ஜோகூரியர்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணியுமாறு வலியுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் ஜோகூரியர்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணியுமாறு வலியுறுத்தல்

பண்டிகைக் காலங்களில், குறிப்பாக உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், கோவிட்-19 க்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள, தொடர்ந்து முகமூடிகளை அணிந்து கொள்ளவும், நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஜோகூரில் கோவிட்-19 நிலைமை கட்டுக்குள் உள்ள போதும், திறந்த இல்ல உபசரிப்புகள் போன்ற சனநெரிசல் அதிகம் சிஐக்கும் என நம்பப்படும் இடங்களில் கலந்துகொள்ளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பது விவேகமானது என்று, ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.

ஜோகூரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 289 கோவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 22) 13 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன என்று, இன்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஜியின் சௌஜானாவின் நடந்த திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், ஜோகூரில் கோவிட்-19 க்கு எதிரான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி அளவை எடுத்துக்கொள்வதற்கான விகிதம் முன்பு 1.9% ஆக இருந்து தற்போது 3.2% ஆக உயர்ந்துள்ளது என்று லிங் கூறினார்.

Previous articleநீதிமன்றத்தின் ஜாமீன் முகப்பிடங்கள் முன்கூட்டியே மூடப்பட்டதா? விசாரிக்க அஸாலினா உத்தரவு
Next articleஜெர்மன் ரயில் சேவை, விமான நிலையங்கள் முடக்கம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version