Home மலேசியா வெப்பமான வானிலை: வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வெப்பமான வானிலை: வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் சமீபகாலமாக வெப்பமான காலநிலை நிலவுவதால், மக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ளுமாறும், நீரை அதிகம் குடிக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

34 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமான வானிலை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தொழில்சார் சுகாதாரம், அவசரநிலை மற்றும் பொது சுகாதார நிபுணர், டாக்டர் ஹனாஃபியா பஷிருன் கூறினார்.

எனவே மக்கள் வானிலை தகுந்த மற்றும் வசதியான ஆடைகளை அணிவது, முகக்கவசம் அணிவது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“தற்போதைய வெப்பமான காலநிலையில், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு நாம் நமது உடலின் நீரேற்றத்தை பராமரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கப் தண்ணீரைக் குடிப்பது மிகவும் முக்கியம். மேலும் சர்க்கரை, காஃபின், கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை இரத்தத்தின் செறிவை அதிகரிக்கவும், மேலும் நீரிழப்பை அதிகரிக்கவும் செய்ய ஊக்கியாக செயற்படும் என்றார்.

“இப்போதுள்ள வெப்பமான வானிலை 34 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைவது மிகவும் கடினம், இந்த வெப்பமான வானிலை காரணமாக புகை மூட்டம் உள்ளது.

“எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் (மூச்சுத் திணறல்) ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

“மூச்சுத் திணறலின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போது மருத்துவ சிகிச்சையைப் பெறுங்கள், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுங்கள்” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version