Home மலேசியா ஆண்டு 1-க்கான மாணவர்கள் சேர்க்கை மே 2 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் –...

ஆண்டு 1-க்கான மாணவர்கள் சேர்க்கை மே 2 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் – கல்வி அமைச்சகம்

2024/2025 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு குழந்தைகளின் சேர்க்கைக்கான பதிவுகள் வரும் மே 2 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் https://idme.moe.gov.my என்ற இணையதளத்தில் கல்வி அமைச்சின் ஒருங்கிணைந்த அமைப்பு (MOEIS) பொது மேலாண்மை தொகுதி மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் என்று கல்வி அமைச்சகம் (KPM) இன்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஒரு இடுகை மூலம் தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியின்படி, முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 2017 ஜனவரி 2 முதல் 2018 ஜனவரி 1 வரை பிறந்த மலேசியக் குடிமக்கள் அனைவரும் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பதிவு நடவடிக்கைகான வழிகாட்டுதல்களும் அந்த இடுகையில் பகிரப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version