Home Top Story நடிகை கோமல் சர்மா பெயரில் பணமோசடி

நடிகை கோமல் சர்மா பெயரில் பணமோசடி

பிரபல நடிகை கோமல் சர்மா. இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் படம் மூலம் அறிமுகமானார். நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் படங்களிலும் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது பெயரில் பண மோசடி நடப்பதாக ரசிகர்களை அவர் எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து கோமல் சர்மா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒரு மொபைல் நம்பரை பதிவிட்டு உள்ளார். அது எனது நம்பர் இல்லை. போலியானது.

இதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுகிறார். யாரும் இதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகாதீர்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு யாரேனும் குறுந்தகவல் அனுப்பினால் போலீசில் புகார் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version