Home மலேசியா பிப்ரவரி 3 முதல் பள்ளி மாணவி தர்ஷினியை காணவில்லை- ஈப்போ போலீஸ்

பிப்ரவரி 3 முதல் பள்ளி மாணவி தர்ஷினியை காணவில்லை- ஈப்போ போலீஸ்

கடந்த பிப்ரவரி 3 தேதி பள்ளிக்குச் சென்ற என்.தர்ஷினி, 16, என்ற சிறுமி, பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால், காணாமல் போன அந்த மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

குறித்த மாணவி பள்ளி சீருடை அணிந்திருந்த நிலையில், இறுதியாக செக்கோலா மெனெங்கா கேபாங்சான் ஊத்தான் மெலிந்தாங்கில் கடைசியாக காணப்பட்டார் என்று, ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் அட்னான் பஸ்ரி கூறினார்.

“பிப்ரவரி 4 அன்று, 16 வயது சிறுமி காணாமல் போனது குறித்து ஹிலிர் பேராக் காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 7) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பிப்.3ம் தேதி, குறித்த மாணவி பள்ளிக்கு சென்று, பின் வாயில் வழியாக நுழைந்து, முன் வாயில் வழியாக வெளியேறி, பின் வீடு திரும்பவில்லை என தெரியவந்தது.

காணாமல்போன மாணவியின் தாயார் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, தர்ஷினியின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் விநியோகித்தோம் என்றார்.

“பாதிக்கப்பட்டவர் பற்றிய தகவல் அல்லது தெரிந்தவர்கள் IPD ஹிலிர் பேராக்கை 05-629 9222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக் நூர் ஐஸ்யா மாட் இசாவை 011-1633 8463 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

– Bernama

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version