Home Top Story ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு

ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றன.

குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.  இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார். எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version