Home மலேசியா இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 40 வயது ஆடவர் கைது

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 40 வயது ஆடவர் கைது

இஸ்லாம் மதத்தின் ‘சலாம்’ அல்லது வாழ்த்து வார்த்தைகளை கேலி செய்து, இஸ்லாத்தை அவமதித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, 40 வயதான உள்ளூர் நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று வாங்சா மாஜூவில் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்படை செயலாளர் டத்தோ நூர்சியா சாதுதீன் தெரிவித்தார்.

சந்தேகநபரிடம் இருந்து இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் மூன்று சிம்கார்டுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ், மதத்தின் அடிப்படையில் ஒற்றுமை அல்லது பகைமையை ஏற்படுத்தியதற்காகவும், இந்த வழக்கை புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (D5) விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

நூர்சியாவின் கூற்றுப்படி, மார்ச் 22 அன்று 3R (ஆட்சியாளர் / மதம் / இனம்) பணிக்குழு நிறுவப்பட்டதிலிருந்து, மொத்தம் 18 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடிய, சமூக வேற்றுமையை ஏற்படுத்தக்கூடிய அல்லது முடியாட்சி அமைப்பு தொடர்பில் கேலியான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version