Home மலேசியா தஞ்சோங் காராங் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

தஞ்சோங் காராங் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

தஞ்சோங் காராங் கடற்பரப்பில் B1 வகை மீன்பிடி படகில் சட்டவிரோதமாக மீன்பிடித்தது மற்றும் பணிபுரிந்ததாகக் கூறி நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (மே 17) இரவு 8.30 மணியளவில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய கடல்சார் அமலாக்கத்துறை இயக்குநர் கடல்சார் கேப்டன் சிவகுமார் வெங்கடாசலம் தெரிவித்தார்.

“தஞ்சோங் காராங்கிலிருந்து தென்மேற்கே 6.1 கடல் மைல் தொலைவில் MMEA ரோந்துப் படகு மூலம் குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 40 முதல் 53 வயதுக்குட்பட்ட மியன்மார் பிரஜைகளைக் கொண்ட ஒரு கேப்டன் மற்றும் மூன்று பணியாளர்களால் அந்தப் படகு இயக்கப்பட்டது முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

“மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஒரு நாள் மட்டுமே கடலுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை (மே 18) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கப்பலில் உள்ள ஆவணங்களை மேலும் ஆய்வு செய்ததில், கேப்டன் மற்றும் மூன்று பணியாளர்கள் செல்லுபடியாகும் அடையாள ஆவணம் மற்றும் மீன்பிடி அங்கீகார உரிமம் ஆகியவற்றை மீன்வளத் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கத் தவறியது கண்டறியப்பட்டது.

மேலும், படகில் சுமார் 50 கிலோ எடையுள்ள பல வகை மீன்களும் காணப்பட்டன.

“கைது செய்யப்பட்ட படகின் கேப்டனும் பணியாளர்களும் பூலாவ் இந்தா மரைன் போலீஸ் ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்கள் மேல் நடவடிக்கைக்காக எம்எம்இஏ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார், இவ்வழக்கு மீன்பிடி சட்டம் 1985 மற்றும் குடிநுழைவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version