Home மலேசியா பாகன் டத்தோ பாலம் ஜூன் தொடக்கத்தில் மக்கள் பாவனைக்கு திறக்கப்படும் -பணிகள் துறை அமைச்சர்

பாகன் டத்தோ பாலம் ஜூன் தொடக்கத்தில் மக்கள் பாவனைக்கு திறக்கப்படும் -பணிகள் துறை அமைச்சர்

பாகன் டத்தோ பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார்.

2017 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கிய 1.5 கிமீ நீளமுள்ள பாலம், வரும் ஜூன் மாத தொடக்கத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பணிகள் துறை அமைச்சர் கூறினார்.

இந்த பாலத்தின் மூலம் பாகன் டத்தோ மற்றும் பாசீர் சாலாக் நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“செலேகோ, சுங்கை சுமூன் போன்ற சிறிய நகரங்களில் இருந்து கம்போங் கயான், ஸ்ரீ இஸ்கண்டர், போத்தா, பாரிட், பேராக் தெங்காவில் உள்ள சங்காட் லாடா மற்றும் சித்தியாவான், மாஞ்சுங் மற்றும் லுமுட் போன்ற பகுதிகளுக்கு இடையிலான தூரத்தை இது குறைக்கும்.

“இதற்கு முன், வாகன ஓட்டிகள் 50 கிலோமீட்டர் தூர பயணத்திற்கு FT069 மற்றும் FT005 வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொள்வார்கள், ஆனால் இனி இப்பாலம் மூலம், பயணம் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (மே 19) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version