Home மலேசியா ஷா ஆலாம் மசூதி அருகே நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் – போலீசார்...

ஷா ஆலாம் மசூதி அருகே நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் – போலீசார் எச்சரிக்கை

ஷா ஆலாமிள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா மசூதி அருகே இன்று வெள்ளிக்கிழமை (மே 19) திட்டமிடப்பட்ட பேரணியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.

“அல்லாஹ்” என்ற வார்த்தையை முஸ்லிமல்லாதவர்கள் பயன்படுத்த அனுமதித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டை திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது என்று, ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் Ramsay Embol இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த “ஆர்ப்பாட்டத்தைத் தொடர வேண்டாம் என்று அமைப்பாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம், குறிப்பாக இது ஒரு வழிபாட்டுத் தலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது, இது அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 இன் கீழ் குற்றமாகும்.

“அனைவரும், குறிப்பாக ஷா ஆலம் பகுதியில் உள்ளவர்கள், பொது நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பராமரிக்க, அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version