Home மலேசியா மாநிலத் தேர்தலில் வாக்குச் சீட்டில் அம்னோ, டிஏபி சின்னங்கள் இடம்பெறாது – அகமட் மஸ்லான்

மாநிலத் தேர்தலில் வாக்குச் சீட்டில் அம்னோ, டிஏபி சின்னங்கள் இடம்பெறாது – அகமட் மஸ்லான்

நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் வாக்குச் சீட்டில் அம்னோ அல்லது டிஏபி கட்சிகளின் சின்னம் எதுவும் இடம்பெறாது என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கூறினார்.

பாரிசான் நேசனல் (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ( PH) ஆகிய இரண்டு பெரிய கட்சியின் சின்னங்கள் மட்டுமே பெரிகாத்தான் நேஷனலை (PN) எதிர்க்கப் பயன்படுத்தப்படும் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

“நாம் ஒரு அணியில் இருக்கும்போது, ​​நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், அதனாலேயே வாக்குச்சீட்டில் DAP கொடி அல்லது DAP லோகோ இருக்காது, அதுபோல UMNO கொடியும் இல்லை, PH மற்றும் BN லோகோக்கள் உள்ளன. இம்முறை தேர்தல் அரசியலில் அதுதான் யதார்த்தம். இதனை அனைவரும் புரிந்துகொள்ளுவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version