Home Top Story 21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர்கள் செலவு – மெட்டா நிறுவனம்...

21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர்கள் செலவு – மெட்டா நிறுவனம் தகவல்

முகநூலின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 13% பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டது. பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்கும், நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சுமார் 21 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

அதன்படி மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

Previous articleTiga maut termasuk 2 rentung nahas Mercedes Benz, Toyota Sienta
Next articleசிலாங்கூர் குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கான புதிய இடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version